கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அதுபோல வால்பாறை பகுதியைச் சுற்றிலும் யானைக் கூட்டங்கள் அதிக அளவில் உள்ளனர். இவை தேயிலை தோட்டங்களில் சுற்றுவது சாலையை கடப்பதுமாக உள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சோலையார் அணை செல்லும் உருளிக்கல் பகுதியில் யானை கூட்டம் சாலையை கடந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வனத்துறை கோரிக்கை வைத்துள்ளார்கள். மற்றும் வால்பறை பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதினால் எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சத்தில் வேலை செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் இருப்பதால் வனத்துறை பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்துகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.