கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள இயற்கை எழில் மிகுந்த பகுதிகளை பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று மிகுந்து காணப்படும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாண்டிச்சேரி பகுதியில் இருந்து சுற்றுலா வந்த வேன் வால்பாறை பகுதிக்கு வந்து இங்கு உள்ள இடங்களை பார்த்துவிட்டு திரும்பிச் செல்லும் வழியில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில் ஒன்றாவது கொண்டை ஊசி வலையில் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் பயணித்த ஐந்து நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.