தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க மாவட்ட கூட்டமைப்பின் பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தாமிரபரணி ஆறு ஸ்ரீவைகுண்டம் வழியாக தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் குடிநீருக்காகவும் மற்றும் விவசாயத்திற்கு கால்நடை வளர்ப்போருக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைவு இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவுகிறது இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த மனுவில் கூறப்பட்டுள்ள செய்தி:
வாழவல்லன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தாமிரபரணி நதியின் தண்ணீர் மிக குறைவாக உள்ளதால் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத காரணத்தினால் உமரிக்காடு, முக்காணி , வாழவல்லன், கொட்டாரக்குறிச்சி, ஆறுமுகமங்கலம், கொற்கை, மாரமங்கலம், அகரம், இடையற்காடு, பழையகாயல், மஞ்சள்நீர்காயல்,
கோவங்காடு, முள்ளக்காடு, குலையன்கரிசல், போன்ற பஞ்சாயத்துகள் மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களுக்கு கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் தேவைக்காக ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையின் மேற்கு பகுதியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு செல்லும் தண்ணீரை ஒரு சில மாதங்கள் நிறுத்தி வைக்க கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.