எட்டையபுரம் நகர அதிமுக சார்பில் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் விழா எட்டையபுரம் நகர கழக செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் தூத்துக்குடி கோவில்பட்டி மெயின் ரோட்டில் டாக்டர் M.P. சந்திரன் நினைவு கொடி கம்பத்தின் முன்பு கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ ராஜு கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் செ. கணபதி, வார்டு செயலாளர்கள் கார்ட்டன் பிரபு, கருப்பசாமி, சின்னத்துரை , ஐஸ் முனியசாமி, எம்.ஜி. ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெயகுமார், மகளிர் அணி சுப்பலட்சுமி, செல்வி,சாந்தி, ரத்தினம் , இலக்கிய அணி செயலாளர் வேலுச்சாமி, புதூர் அ.தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர், தனவதி,கோவில்பட்டி ஆவின் சேர்மன் தாமோதரன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி முன்னாள் சேர்மன் சத்யா உள்பட இளைஞரணியினர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.