தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பெரியகுளத்தில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காற்றாலை நிறுவனம் ஊழியர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சுந்தர்ராஜ் அவர்கள் , தற்போது அமமுக வின் தலைமை கழக அமைப்பு செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனியார் காற்றாலை நிறுவன ஊழியர்களால் தாக்குப்பட்டது தொடர்பாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு செல்லும் நீரோடை பாதைகளை ஆக்கிரமித்துள்ள தனியார் (Semcorp) காற்றாலை நிறுவனத்தின் அடாவடித்தனங்களை கண்டித்து ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர் மேலும் நீதிமன்றங்களில் வழக்கம் தொடுக்கப்பட்டுள்ளது, பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் பொது பாதைகளை ஆக்ரமித்து சிமெண்ட் சாலை அமைப்பதை தடுக்க சென்ற முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தேறியுள்ளது.
தனியார் காற்றாலை நிறுவன ஊழியர்களால் தாக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ இரா.சுந்தர்ராஜ் தற்போது ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தப் பெரியகுளம் ஆனது சுமார் 80 ஹெக்டர் பரப்பளவு கொண்டது பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து சிலோன்காலணியில் இருந்து வரும் நீர்வழி போக்குவரத்து வழியாகவும் மேற்கே சுந்தர்ராஜ் அவர்களின் பண்ணை அருகிலும் கனரக வாகனங்கள் நீரோடைகள் பாதை வழியாக தினந்தோறும் பயன்படுத்தப்பட்டு தருகிறது, அதுமட்டுமல்ல ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள பல்வேறு ஓடைகளை விவசாயிகள் கேள்வி கேட்டாலும் அதற்கு சரியான பதில் தருவதில்லை இதற்கு ஒரு சரியான முடிவு மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.