
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும்வென்றான் கிராமத்தில் விதி முறைக்கு புறம்பாக நத்தம் பட்டா வழங்கல் -வீஏஓ, துணை வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும்வென்றான் கிராமத்தில் உள்ள அரசு சர்க்கார் மனை நிலத்தினை அரசின் விதிமுறைகளை ஏதும் பின்பற்றாமல் தன்னிச்சையாக வட்ட கணக்கு மற்றும் நத்த நிலவரித் திட்ட தூய திட்டப் பதிவேட்டில் முறைகேடாக பதிவுகள் செய்து சுமார் 1.2 கோடி சந்தை மதிப்பிலான 40 சென்ட் நிலத்தினை விதிமுறைக்கு
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புறம்பாக நத்தம் பட்டா வழங்கியும் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டிய பதிவேட்டினை தனது வீட்டில் வைத்து முறைகேட்டில் ஈடுபட்டும் மேற்படி முறைகேடான பட்டாவிற்கு தூய நகல் பட்டா வழங்கியும் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மற்றும் எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலரும் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மேற்படி முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக தலைமை இடத்து துணை வட்டாட்சியர் வடிவேல் குமார், எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் கண்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.











