அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதியம்புத்தூரில் நேற்று மாலை பேரறிஞர் அண்ணாவின் 115ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மழை நீடித்தது இந்த கொட்டும் மழையிலும் பொதுமக்கள் கழகத் தொண்டர்கள் குடை பிடித்துக் கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மழையின் காரணமாக கயத்தார் ஒன்றியம் பெருந்தலைவர் மாணிக்கராஜா அவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமான் அவர்களின் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிவபெருமான் அவர்கள் பேசியது:
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கொட்டும் மழையிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி பேரறிஞர் அண்ணா அவர்களிடம் முதலமைச்சராக இருந்தபோது மதராசி என்ற மாநிலத்தை தமிழ் நாடு என மாற்றினர் மும்மொழி கொள்கை நீக்கி தமிழ் ஆங்கிலம் என சட்டம் கொண்டு வரப்பட்டது , நான் சட்டமன்ற உறுப்பினர் இருந்த காலத்தில் புதியம்புத்தூரில் 10000 லிட்டர் தண்ணீர் தொட்டி 2001 ஆண்டு துவங்கப்பட்டது.
ஒருமுறை கல்லூரி விழாவில் ஜவஹர்லால் நேரு கலந்து கொண்ட போது அங்கு அண்ணாவும் சென்று இருந்தார் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்க யாராவது இருக்கிறீர்களா என கேட்ட பொழுது அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து அசத்தினர், நாங்கள் எப்போதும் கோவில்பட்டி மற்றும் கழுகுமலை பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது இந்த முறையில் பெரியார் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் புதியம்புத்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் சொல்லிவிட்டு இப்பொழுது தகுதி பார்த்து வழங்குகிறார்கள், இந்த பித்தலாட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே எடுபடாது, எங்களுக்குள் பல அணிகள் இருக்கலாம் ஒன்று சேர்ந்தால் திமுக ஒரே இடத்தில் கூட வெற்றி பெறாது, மழையின் காரணமாக கயத்தார் ஒன்றியம் பெருந்தலைவர் மாணிக்கராஜா அவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என பேசினார்.
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட 300 பெண்களுக்கு விலையில்லா சேலை வழங்கப்பட்டது. இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் A.சிவபெருமாள், கழக அமைப்புச் செயலாளர் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மண்டபம் முனுசாமி, ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் P.கரன்சிங்’ ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆனந்தப்பன் மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் V.பூலோக பாண்டியன்
மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் நல்லமலை செல்லத்துரை பாண்டியன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலாளர்கள் உலக ஐயா மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சிவா மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆண்கள் பிரிவு மகாராஜா ஒன்றிய கழகச் செயலாளர்கள் கணபதி பாண்டியன் விஜயபாஸ்கர் ஜெயசங்கர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.