பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் தெய்வச்செயல்புரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு தெய்வச்செயல்புரம் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் பாரதப் பிரதமர் நீண்ட ஆயுளோடு இருக்கவும் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டிய பிரார்த்தனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு தலைமையில் ஒன்றிய தலைவர் நங்கமுத்து முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் அவர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட நிர்வாகிகள் முருகன், சீனிவாசன் வசந்த், செல்வம், சுரேஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் மணிகண்டன் ஒன்றிய செயலாளர்கள் செல்வி, சித்திரை குமார், மாரியப்பன் ஒன்றிய துணை தலைவர் சரவணன் பொருளாளர் பால் துறை மற்றும் ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் தம்பான், பிரவின், சுனில், கோபால், மூர்த்தி, செந்தூர்பாண்டியன், கணேசன், முருகையா, பரமசிவன், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.