கோவை மாவட்டம் வால்பாறையில் முக்கியமான பேருந்து நிறுத்தமாக இருப்பது காந்தி சிலை பகுதி. இந்த பகுதியிலிருந்து அக்கா மலை, வெல்ல மலை, பொள்ளாச்சி, வாட்டர் பால், ஐயர்பாடி ஊசிமலை, கருமலை, போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்து பயணம் செய்வார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்வாறு உள்ள சூழ்நிலையில் இந்தப் பகுதியில் வானங்கள் கொண்டு வந்து நிறுத்தி விடுவதனால் பொதுமக்கள் நிற்பதற்கு கூட இடம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் மழைக்காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பழைய பேருந்து நிறுத்தத்துக்குள் பேருந்துகளை நிறுத்தினால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மழை நீரில் நனையாமல் பேருந்தில் ஏறுவதற்கு வசதியாக இருக்கும். எனவே இந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கி வாகனம் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் சிரமமின்றி பேருந்தில் ஏற வழிவகை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர் -சி.ராஜேந்திரன்.
-திவ்யகுமார், வால்பாறை.