தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேளாண்மை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு மற்றும் போலி ஒத்திகைப்பை பயிற்சி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த தீ தடுப்பு போலி ஒத்திகை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தடுப்பு போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.
தற்செயலாக பொது இடங்களில் தீவிபத்து ஏற்படும் அப்போது தீயை எவ்வாறு அனைப்பது. சமையல் எரிவாயுவினால் ஏற்படும் எரிவாயு கசிவு அதனால் ஏற்படும் தீ இவைகளை எவ்வாறு கையாள்வது தீயை கட்டுப்படுத்தி அணைப்பது, மேலும் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது எவ்வாறு மக்களை பாதுகாப்பது போன்றவைகளைப் பற்றி வேளாண்மை அலுவலகத்தில் செயல்முறைகள் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.