அஇஅதிமுக-வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா முன்னாள் அமைச்சர் சட்ட மன்ற உறுப்பினர் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.
அஇஅதிமுக என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியாவின் மூன்றவதாக பெரிய அரசியல் கட்சியாகும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் கடம்பூர்.செ.இராஜூ D.Ted., அவர்கள் தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று பேரறிஞர் அண்ணா, எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் நிறுவப்பட்ட திராவிடக் கட்சி இது. சி. என். அண்ணாதுரையின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை எம்.ஜி.ஆரால் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு முறை பெரும்பான்மை பெற்று, மாநில வரலாற்றில் மிக வெற்றிகரமான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்நகழ்வில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் P.மோகன் B.Sc., அவர்கள்
விளாத்திக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.சின்னப்பன் D.EEE அவர்கள் மற்றும் நிர்வாகிகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.