தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே ரூ.4 1/2 கோடி செலவில் பசுவந்தனை ஓசநூத்து ஒரு வழி சாலையில் இருந்து இரட்டை வழியாக சாலையாக அகலப்படுத்தும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஓட்டப்பிடராம் தாலுகா பசுவந்தனை ஆரைக்குளம் ஓசநூத்து 4.2 கிலோமீட்டர் சாலை ஒரு வழி சாலையில் இருந்து இரட்டை வழியாக சாலையாக ரூ. 4 1/2 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி தொடக்க விழா ஆரைக்குளம் கிராமத்தில் நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பாராம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் லதா முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ ஒரு வழி சாலையில் இருந்து இரட்டை வழியாக சாலையாக ரூ. 4 1/2 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோசப் பிரேம்குமார், வருவாய் அலுவலர் வசந்தகுமார் கிராம நிர்வாகம் அலுவலர், கவுன்சிலர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.