கோவை: ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Down Town) சார்பாக ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் எனும் புதிய திட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் செயல்பட்டு வரும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன் டவுன் (Down Town) சார்பாக பல்வேறு சமூக நலப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்,விளையாட்டு வீர்ர்கள்,மற்றும் நிதி வசதியற்றவர்களுக்கான புதிய ஆர்.சி.டி லிம்ப் 2 ரன் புதிய சேவை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.. இரண்டு வகையாக அமல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில், முட்டு வலியால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் என ஒரு வகையும், இதே வலியால் தினமும் அவதிப்படும் நிதிவசதியற்றவர்கள் என இருவரை தேர்வு செய்து, இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. நாற்பது இலட்சம் ரூபாய் சர்வதேச நிதியிலிருந்து துவங்கப்பட உள்ள இந்திட்டத்திற்கான துவக்க விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப் அரங்கில் நடைபெற்றது.
திட்டத்தின் தலைவர் ஏ. காட்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயக்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திட்டத்தை துவக்கிவைத்தனர். விழாவில் சிறப்பு வி.ஜி.எம் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. ஜி. மோகன் பிரசாத், ரோட்டரி நிர்வாகிகள் செல்லா கே. ராகவேந்திரா, கோகுல்ராஜ், இளங்கோ பாலாஜி பாபு மோகன்ராஜ், குஹன், டாக்டர் சுமன், விக்னேஷ். சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் முதல் பயனாளியாக அன்னூரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரரும், வெல்டிங் தொழில் செய்து வருபவருமான ராஜதுரை ஆகியோர் பயனடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
-சீனி, போத்தனூர்.