கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்றைய தினம் மூணாறு அரசு கல்லூரி சார்பில் நவம்பர்-1 கேரளபிறவி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது . இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
செஸ் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கேரளாவின் மிஸ்டி முகாம் மதிப்பிற்குரிய தேவிகுளம் சப்-கலெக்டர் ஸ்ரீ. ராகுல் கிருஷ்ண ஷர்மா சம்பூர்ண செஸ் சாக்ர முகாம் அறிவித்தார்.
கேரளப்பிறவி தின விழா நேற்று கல்லூரி முதல்வர் டாக்டர். மனேஷ் என்.ஏ தலைமையில் நடைபெற்றது. விழாவில் “செஸ் சாக்ர முகாம்” திட்ட கோர்டினேட்டர் டாக்டர். சோனி டி. எல் திட்டத்தை பற்றிய விவரம் வழங்கினார். யூனியன் அதிகாரி அமல்பிரேம், துணை முதல்வர் டாக்டர். வந்தனா கே.டி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
(ECONOMICS DEPT)பொருளாதாரம் பிரிவு தலைவர் டாக்டர். தீபா ரகுகுமார் நன்றி உரை கூறினார். செஸ் சாக்ஷர வளாகமாக அறிவிக்கப்படுவதன் பகுதியாக மைதானத்தில் பெரிய செஸ் போர்டு அமைக்கப்பட்டது. செஸ் போர்டு அமைப்பதற்கு இரண்டு வாரகாலம் நீடித்தது.
திட்டத்தின் முதுகலை பயிற்சி பெற்ற திருச்சூரை சார்ந்த ஸ்ரீ. எ. மனோஜ் குமார் தேர்வு செய்யப்பட்டார். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் முதல் கட்டத்தில் நிபுணர்கள் பயிற்சி அளித்தனர் மற்றும் குழந்தைகளின் சிந்தனை திறன் , பகுப்பாய்வு திறன் , வளர்ப்பு பயிற்சி மற்றும் மதுபான போதைப்பொருளின் உட்கொள்வதை தடை செய்யவும், இவ்விழா நடத்துவதின் நோக்கம் வரும் எதிர்கால சந்ததிகளை நாட்டு பற்று உடையவர்களாகவும் அனைத்து மக்களும் சாம்ம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதே இதன் முக்கிய நோக்கம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஜான்சன்
மூணார்.