கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை திவான்சாபுதூர் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம் டாஸ்மாக் கடை முன்பு சாலை ஓரத்தில் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என கலந்து மலை போல் குவிந்து கிடக்கின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட ஏதுவாக அமைந்துள்ளது.
இப்பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர் இதனால் மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இப்பகுதியில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்படுவதால் உணவுப் பொருட்களின் தன்மை கேள்விக்குறியாக உள்ளது அதை வாங்கி உண்ணும் மக்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழும் பொழுது மனது வலிப்பதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதற்குக் காரணம் பொதுமக்களே என்றாலும் அதை சரி செய்ய வேண்டிய இடத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி நிர்வாகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூய்மையை தாய்மைக்கு நிகராகும் என்ற சிந்தனையோடு
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.