கோவை மாவட்டம் வால்பாறை வனப் பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாக கூறப்படுகிறது மேலும் வனவிலங்கு உயிரிழப்பும் அடிக்கடி ஏற்படுகிறது இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வருக்கு தமிழக வணிகர் சம்மேளனம் சார்பாக மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மனுவில்;
கோவை மாவட்டம், வால்பாறையில் வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதும், வனவிலங்கு உயிரிழப்பும் தொடர்ந்து ஏற்படுகிறது. எதிர்கால சந்ததிகள் ஆரோக்கியமாக இவ்வுலகில் வாழ மத்திய மாநில அரசுகள் வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க பலகோடி ரூபாய் செலவு செய்து தற்போது வரை வனத்தையும், வனவிலங்குகளையும் எங்களை விட பாதுகாக்க முடியாது என்று வனத்துறை இப்பகுதியில் இருக்கும் அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க மாலை 6.00 மணிக்குமேல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி கிடையாது. பல இடங்களில் வனத்துறை கட்டுப்பாட்டில் யாரையும் அனுமதிப்பதில்லை. தேயிலைத்தோட்ட எஸ்டேட் பகுதிகளில் தேயிலை உற்பத்திக்காக மிகவும் நச்சுத்தன்மையான மருந்து, உரங்களை நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்தாமல் சாதாரண அப்பாவி மக்கள் மீது தன் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு தொடர்ந்து பொதுமக்களையும், இப்பகுதியில் இருக்கும் பழங்குடியினரையும் துன்புறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதை கருத்தில் கொண்டு இனி இவ்வாறு நடைபெறாமல் இருக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். இனியும் அரசு வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இவ்வுலகில் எதிர்கால சந்ததிகள் சுத்தமான காற்றும், நீரும் இல்லாமல் பெரும் கஷ்டப்படுவார்கள் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்க இம்மனுவை பொதுநலனாக ஏற்றுக்கொண்டு உரிய விசாரணை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
P.பரமசிவம்
மாநில செயற்குழு உறுப்பினர் தமிழக வணிகர் சம்மேளனம்
வால்பாறை.
-M.சுரேஷ்குமார்.