கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதியில் படையப்பா என்ற யானை அப்பகுதியில் மிகவும் பிரபலமான ஒன்று. பல வருடங்களாக இந்த யானை சாலைகளை கடக்கும் பொழுது அப்பகுதியில் சுற்றி திரியும் பொழுது மக்களை துன்பப்படுத்தாத வகையில் வலம் வந்தது குறிபபிடத்தக்கது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனால் தற்போது சில மாதங்களாகவே ரேஷன் கடைகளை அடித்து உடைப்பதும் சாலையை வழியாக வரும் வாகனங்களை தடுத்து உடைப்பதும் வீடுகளை உடைப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளது அதேபோல் தற்பொழுது தேவிகுளம் பகுதியில் பட்ட பகலிலேயே யானை வீட்டின் முன்பாக வந்து நிற்பதால் அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் தவிக்கின்றனர்.வனத்துறையினரிடம் புகார் அளித்தும் வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை படையப்பா என்கிற அந்த யானையை வேறு ஏதாவது காட்டுக்குள் கொண்டு செல்ல வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு.