கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சிக்கு
உட்பட்ட தமிழக கேரளா எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் தமிழக டாஸ்மாக் கடை முன்பு மக்கள் அதிகம் நடமாடும் பிரதான சாலையில் மலைபோல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பகுதியில், பிளாஸ்டிக் பாட்டில்கள்,பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் ஹோட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள், வீட்டு கழிவுகள் மேலும் மனிதக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது.
தேங்கி கிடக்கும் கழிவுகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் தொற்று வரவும் ஆபத்தான சூழ்நிலை இப்பகுதியில் உருவாகியுள்ளது. எனவே, தேங்கி கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் எச்சரிக்கை,
பொது இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பலகையைக் கண்டு யாருக்கும் பயமில்லை. அதேசமயம் ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற சிந்தனையோடு,
செய்தியாளர்,
-M.சுரேஷ்குமார்.