Trending

முதலமைச்சருக்கு வால்பாறை C I T U கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை சி ஐ டி யு தொழிற்சங்க நிர்வாகி N.நேதாஜி தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில்

வால்பாறை அடுத்துள்ள ஊசிமலை மற்றும் ஊசிமலை டாப் மற்றும் வெள்ளமலை டாப் மற்றும் கருமலையிலிருந்து அக்கா மலை செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாகும் உள்ளது.

இதனால் அப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அடிப்படைத் தேவைகள் குறிப்பாக மருத்துவ சேவைகள் பெற முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த ஆட்சியில் தேர்தல் நேரத்தில் சாலைகளை சரி செய்வதற்காக பூமி பூஜை போட்டார்கள் பணிகள் நடக்கவில்லை. அதை நம்பி அப்பகுதியில் இருக்கும் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்பொழுதும் இது தொடர்பாக எங்கள் அமைப்பு சார்பாகவும் மற்றும் பல அரசியல் கட்சிகள் சார்பாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தாங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன் எனவே தயவு செய்து அப்பாவி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக உடனடியாக சாலைகளை அமைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பொது நலத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் கூறுகையில் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக இந்த சாலைகள் குண்டு குலையுமாகும் வாகனம் போக முடியாமலும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் நாங்கள் சிரமப்படுகின்றோம்.

இப்பகுதியில் இயங்கும் அரசு பேருந்துகளும் அடிக்கடி குண்டும் குழியுமான சாலைகளில் இயக்குவதால் பேருந்தும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது போக்குவரத்து கழகத்தால் நிரந்தரமாக பேருந்து இயக்க முடியாமல் சிரமப்படுகின்றன இதனால் அரசுக்கு மேலும் வருமான இழப்பு செலவுத்தொகை அதிகமாகின்றது எங்களது தேவைகளும் எங்கள் குழந்தைகளும் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றோம் நாளைய வரலாறு செய்தி மூலமாக இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக சாலைகளை சரி செய்து எங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

நாமும் இவர்களின் கோரிக்கைகளை ஏற்று சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்யும் பொழுது உண்மையிலே பரிதாபமாக உள்ளது வால்பாறை டவுன் பகுதிகளில் நல்லா இருக்கும் சாலைகளுக்கு சிமெண்ட் சாலை தரமற்றதாக அவசர கதியில் போடுகிறார்கள். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிறது பொதுமக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ள குண்டு குழியும் உள்ள சாலைகளை போடாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் பயன்பாட்டுக்குள்ள சாலைகளை தரமாக மழை காலத்துக்கு முன்பாக போட வேண்டும் என்று நாளைய வரலாறு செய்தி வாயிலாக அதிகாரிகளை பொதுநலத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-P.பரமசிவம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp