வால்பாறை அருகே காட்டு மாடு தாக்கி கோவில் பூசாரி பரிதாப பலி!! பொதுமக்கள் அதிர்ச்சி!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் ரயான் டிவிசன் பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் அருகிலுள்ள கோவிலில் பூசாரி ஆக பணியாற்றி வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து முப்பது மணி அளவில் கோவிலுக்கு சென்ற அவர் தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார் அப்பொழுது அருகில் உள்ள பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அங்கு நின்று கொண்டிருந்த காட்டு மாடு திடீரென்று இவரை முட்டி தாக்கியது இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனால் அருகில் உள்ளவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோன்று காட்டு மாடுகள், காட்டெருமைகள் தாக்கி மனித உயிர்கள் பலியாவது தற்பொழுது அதிகரித்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். கோவில் திருவிழா சமயத்தில் கும்பம் எடுத்துச் சென்ற பொது மக்களை காட்டெருமைகள் துரத்திய சம்பவம் நடந்துள்ளது.
இந்தப் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் வனத்துறையினர் பொதுமக்களை கவனமாக செல்லுமாறும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். பாடலை புதுத்தோட்டம், பச்சமலை, கருமலை, ஸ்டான்மோர், நல்ல காத்து,சிறுகுன்ற நடுமலை ஆகிய பகுதிகளில் இதேபோன்று காட்டெருமைகள் மற்றும் காட்டு மாடுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன எனவே இந்த பகுதியில் வனத்துறையினர் அதிக அளவு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாக்க வேண்டும் மேலும் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp