கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்று காலை சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்தில் சேலை இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சிறுவனின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எஸ்டேட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கருமலை எஸ்டேட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த சிறுவனின் உறவினர்கள் எஸ்டேட் டிராக்டர் மூலமாக கருமலை எஸ்டேட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர் அப்பொழுது நடுமலை பாலத்தில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக டிராக்டரின் டெய்லர் பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது சென்ற 10 பேர் படுகாயம் அடைந்தனர் அதில் இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மீதமுள்ள எட்டு பேர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
–சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
–திவ்யகுமார்.