கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட வால்பாறை சோலையார் டேம் சின்னக்கல்லார் அக்கா மலை எஸ்டேட் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து உள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சோலையார் டேம் மற்றும் முருகாலி சங்கிலி ரோடு பகுதியில் கனமழை பெய்து சாலைகளில் மழை நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்த சூழ்நிலையில் சாலைகள் பழுதடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சாலை குண்டும் குழியுமாக உள்ள காரணத்தினால் மழை பெய்யும் பொழுது அதில் மழை நீர் நிரம்பி மேடு பள்ளம் தெரியாத நிலையில் உள்ளது இந்த சூழ்நிலையை வாகனங்களை இயக்கும் பொழுது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
பயணிகளை ஏற்று செல்லும் பேருந்துகள் ஆபத்தான வகையில் சென்று வருகின்றன.
எனவே அப்பகுதியில் சாலைகளை சீர் செய்வதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர் -சி.ராஜேந்திரன்
-திவ்யகுமார், வால்பாறை.