Trending

விளாத்திகுளத்தில் ‘அப்துல் கலாம்’ டூரிஸ்ட் கார், வேன்உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ‘அப்துல் கலாம்’ டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழக அரசு அறிவித்த சுற்றுலா வாகனங்களின் சாலை வரியை அதிகப்படியாக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த ஆர்ப்பாட்டம் அப்துல் கலாம் டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர் நல சங்கத்தின் செயலாளர் செல்வ முருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகன்,பொருளாளர் விக்னேஷ், துணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மணிகண்டன் வரவேற்பு உரையாற்றினார். லத்திகா கண்ணன் சிறப்புரையாற்றினார். செய்யது யூசப் நன்றி உரையாற்றினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், குளத்தூர், சூரங்குடி, பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

விளாத்திகுளம் நிருபர்

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp