கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் – கடந்த சில மாதங்களாக இ விகோ என்ற செயலி மூலமாக சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இணைந்துள்ளனர் இதில் பாஸ்ட் எலக்ட்ரிக்கல் சார்ஜர் என்ற product மூலமாக மக்கள் invest செய்யும் மதிப்பிலிருந்து மூன்று மடங்காக திருப்பித் தருவதாக கூறி முதலில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த ஆஃபருக்கு தகுந்தார் போல் பணம் வழங்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் பல லட்சம் மக்கள் சேர்ந்த பின்னர் முழுவதுமாக மூடப்பட்டு கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் சுமார் 2000 கோடிக்கு அதிகமான பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது . கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது நேற்று பாதிக்கப்பட்டவர்களில் சிலர் 550 பேருக்கு அதிகமானோர் கோவை காவல்துறை ஆணையரிடம் தங்களுடைய பணங்களை திரும்ப பெற்று தரும்படி மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிறுவனமானது இந்தியாவைச் சார்ந்தது அல்ல என்றும் தேசாய் என்ற நபர் தான் ஏமாற்றியுள்ளார் என்பதும் இந்த செயலியை பயன்படுத்தி பணத்தை இழந்தவர்கள் தெரிவிக்கின்றனர் மற்றும் ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்தியா முழுவதும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் . ஆனால் யாரும் தங்களுடைய இழப்பை தெரிவிக்க முன் வரவில்லை என்றும் இதை அறிந்த யாவரும் அந்தந்த பகுதியில் சென்று காவல்துறையினரை அணுகி கம்ப்ளைன்ட் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இதேபோன்று பல செயலிகள் தற்பொழுது வந்து கொண்டே இருப்பதாலும் அநேக மக்கள் ஏமாந்து கொண்டு இருப்பதாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் இதுபோன்ற செயல்களை அரசு கண்டறிந்து தடை செய்ய வேண்டும் எனவும் இந்த செயலின் மூலம் பாதிக்கப்பட்ட சிலர் அறிவுறுத்துள்ளனர் . நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே இந்தியாவில் இதுபோன்ற செயலைகள் தற்பொழுது நடைமுறைக்கு வந்து ஏழை எளிய மக்களையும் படித்தவர்களை ஆண்ட்ராய்ட் போன் உபயோகிபாளர்கள் அனைவரையும் ஏமாற்றி வருவது தெரிய வருகின்றன. எனவே மக்கள் இது போன்ற செயல்களில் தங்களுடைய பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க நாளைய வரலாறு செய்திகள் அறிவுறுத்துகின்றன. மேலும் இதின் முழு விவரத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.