கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம்: இடுக்கி மாவட்டத்தில் இரண்டு மலைகளை இணைத்து அமைக்கப்பட்டிருக்கும் பிரபலமான இடுக்கி அணை. அந்த அணைக்கு தண்ணீர் செல்லும் ஆறு தான் தோம்பன் குன்று என்கிற ஆறு.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலரும் இந்த ஆற்றில் குளிப்பது வழக்கம் . பைங்காட்டூர் பகுதியை சார்ந்த பகுதியை சார்ந்த மோசஸ் ஐசக் மற்றும் லாசன் மசாஜின் போன்றவர்கள் குடும்பத்துடன் ஆற்றில் வைத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வப்போது கடைசியாக குளிக்க செல்லும் போது அந்த ஆற்றில் ஒரு பெண் தண்ணீரில் விழுந்தவுடன் அப்பெண்ணை காப்பாற்றும் வேண்டும் என்று இருவரும் குதித்தனர் அந்த பெண் காப்பாற்றப்பட்டார்.
ஆனால் குதித்த இரண்டு பேரும் நீந்தி வெளியே வர முடியாமல் நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கி உறவினர்களின் கண் முன்னே அகால மரணம் அடைந்தனர் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் கூட மீட்பு பலனின்றி அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இந்த குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம் அப் பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.