கண்டும் காணாமல் இருப்பதாக அரசு மீது குற்றச்சாட்டு வேலை நிறுத்தத்தை தவிர வேற வழியில்லை…

கோவை மாவட்டம் வால்பாறை CITU சங்கத்தின் பொதுச்செயலாளர் பி பரமசிவம் தலைமையில் மற்றும் CITU போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ராஜா முன்னிலையில் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் இலவச பேருந்து சேவையை சிறப்பாக செய்து வரும் போக்குவரத்து கழகங்களை ஒரு சிலர் சீர்குலைக்கும் முயற்சியால் கடந்த 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தது இதனை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு 19,500 பேருந்துகளாக குறைந்தது.

இந்நிலையில் பேருந்துகள் குறைப்பதால் பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும் குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்பொழுது 1500 பேருந்துகளுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பேருந்துகள் இயக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளது. மற்ற துறையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது போக்குவரத்து ஊழியர்கள் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.

இது போன்ற பல வேறு காரணங்களால் போக்குவரத்துத் துறையை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் எங்களுக்கு வேலை நிறுத்தத்தை தவிரவேற வழி இல்லை என்று கூறிக்கொண்டு வால்பாறை பேருந்து நிலையம் காந்தி சிலை பேருந்து நிலையம் அக்கா மலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் CITU சங்க நிர்வாகி முருகன் அன்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp