அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்மஸ் பண்டிகை போன்ற தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவி என்று அழைக்கப்படும் கவியருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது, இந்த நிலையில் கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அருவியில் குளித்து சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
ஆனால் கவியருவியில் தடுப்பு கம்பி போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதால் அச்சத்துடன் அருவியில் குளிக்கும் நிலை இருப்பதாகவும், எனவே தடுப்பு கம்பிகள் அமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.