கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் குளோபல் அலுமினிய மீட் 2023 என் தலைப்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் வாயிலாக முன்னாள் மாணவர்களிடையே அர்த்தமுள்ள நெட்வொர்க்கிங் மற்றும் கூட்டு ஆதரவை ஊக்குவிக்கும் வகையில் குமரகுரு வணிக டைரக்டரி அறிமுகப்படுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் 8 பேருக்கு சிறந்த முன்னாள் மாணவர்கள் என்ற விருது வழங்கப்பட்டது அதில் சிறந்த சமூக சேவைக்காக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
கு.சண்முகசுந்தரம் அவர்களுக்கும் அல்மா மேட்டருக்கான சேவைக்கான, ஜெனிடிக்ஸ் விருது ரமேஷ் அவர்களுக்கு ம், திருவேணி எர்த் மூவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் அவர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருதும், இஸ்ரோவின் தெர்மல் சிஸ்டம்ஸ் பிரிவு தலைவர் டாக்டர் குருஹத் அவர்களுக்கு, சிறந்த ஆராய்ச்சியாளர் விருதும், இந்திய நிபுணத்துவ விருதை டாக்டர் அனந்தராமன் அவர்களுக்கும், தொழில் முறை சிறப்பு விருதை சுவாமிநாதன் அவர்களுக்கும், சிறந்த ஸ்டார்ட்அப் கான விருதை ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் வழங்கபட்டது,
இந்த நிகழ்வில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் அவர்கள் அனைவருக்கும் விருதுகளை வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.