சிவகங்கையில் உலக சினிமா திருவிழா!! பொதுமக்கள் மகிழ்ச்சி!!

சிவகங்கையில் மக்கள் சினிமா ரசிகர்கள் வட்டம் என்ற அமைப்பின் சார்பில் உலக சினிமா திரையிடல் மலைராம் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. சமூகத்தின் மனப்பான்மையைப் பெருமளவு பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்ததுதான் சினிமாக்கள். அவை சமூகத்தைத் தாண்டி உலக அளவில் இருக்கும் கலாசார வேறுபாடுகளைத் திரையின் வழி சங்கமிக்கச் செய்யும்போது உலக சினிமாக்கள் என்ற பெயரில் வடிவெடுக்கின்றது.

உலக சினிமா திருவிழாவாக எப்போதும் சென்னை கேரளா கோவா போன்ற இடங்களில் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில் தென் தமிழகத்தில் முதன் முறையாக சிவகங்கையில் மக்கள் சினிமா ரசிகர்கள் வட்டம் என்ற அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உள்ள மலை ராம் ஹோட்டலில் பலமொழிகளில் உருவான ஆவணப்படங்கள் குறும்படங்கள் மற்றும் உலக சினிமாக்கள் திரையிடப்பட்டது.

இத்திரைப்படத் திருவிழாவினை சிவகங்கை‌ நகர்மன்ற தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான திரு.CM.துரை ஆனந்த் அவர்கள் துவக்கிவைத்தார். பேராசிரியர், திரைப்படவியலாளர் திரு.ராஜசேகர் சினிமா தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் குறும்பட இயக்குனர்கள் ரவிச்சந்திரன், சைமன் ஜார்ஜ் தங்கவேல் ஆகியோர்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஊடகவியலாளர் கோவிந்தராஜ், திரைப்பட விமர்சகர் கல்யாணக் கண்ணன் ஆகியோர் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனப்பார்வையின் அவசியம் குறித்து விளக்கினர்.

இந்நிலையில் வழக்கறிஞர் இளையராஜா குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலக சினிமாக்கள் பார்க்க வேண்டிய அவசியம் மற்றும் அவை தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் அரசியலிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கங்கள் பற்றி விரிவுரையாற்றினார்.

இந்த திரைப்படத் திருவிழாவில் இயக்குனர்கள் B.சச்சின் இயக்கிய Chicken at Swamy’ s Kitchen, கருப்பையா இயக்கிய சண்முகம் சலூன், ஜார்ஜ் சைமன் இயக்கிய செவ்வாழை, அசோக் இயக்கிய மண், பிரின்ஸ் என்னரசு பெரியார் இயக்கிய திற, தங்கவேல் இயக்கிய சாலையின் மௌனம், கார்திகி கோசல்வ்ஸ் இயக்கிய Oscar விருதுபெற்ற The Elephant Whisperers, சார்லஸ் சாப்ளின் இயக்கிய உலகப் புகழ்பெற்ற The Kid ஆகிய மனித நேயம், மதச்சார்பின்மை, குழந்தகள் உலகம், வறுமை, அன்பின் வலிமை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்தும் விளைவுகள், வன உயிரினங்களுக்கும் மனிதனுக்குமான உறவுகள், பழங்குடியினர்களின் வாழ்க்கை பற்றிய குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலக சினிமாக்கள் திரையிடப்பட்டு பார்வையாளர்களால் விமர்சனம் செய்யப்பட்டன. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள் என 60 பேர் கலந்துகொண்டனர்.

இறுதியாக திரைப்படத் தொகுப்பாளர் சரவணப் பாண்டி நன்றியுரையாற்றி நிறைவு செய்தார். உலக சினிமா என்ற பெயரில் வெறுமனே சினிமாக்களை மட்டும் பார்வையிடாமல் ஒவ்வொரு சினிமா முடிந்த பிறகும் அதைப் பற்றிய விமர்சனங்களும் கருத்துப் பரிமாறுதலும் நடைபெற்றது கலந்து கொண்டவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

-தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp