செக்காரக்குடி கிராமத்தில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் துவங்கி வைத்தார்.
https://youtu.be/0mzeGj6cBSU
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் கருங்குளம் ஒன்றியம் செக்காரக்குடி கிராமத்தில் ரூபாய் 54 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா நேற்று தொடங்கி வைத்தார்.
மேலச்செக்காரக்குடி புதுக்காலணி தெருவில் ரூ.5.46 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை தொடர்ந்து நடுச்செக்காரக்குடி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டும் பணியை துவக்கினார்.
மேலும் கீழச்செக்காரக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ரூ.8.58 மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணியை பின்னர் கீழச்செக்காரக்குடி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லட்சம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பணிகளை தொடங்கி வைத்தார்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணி மற்றும் பள்ளி வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ8.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.