தூத்துக்குடி மாவட்டம் கடந்த டிசம்பர் மாதம் 17 & 18 தேதியில் பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
அதைப் போல இன்று தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் முத்தையாபுரம் பகுதியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் நிவாரணம் வழங்க வாகனம் வந்தது. இதை பார்த்த தமிழர் விடியல் கட்சி சந்தனம்ராஜ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் பொதுமக்களும் அப்பகுதியை சேர்ந்த பெண்களும் கடுமையான எதிர்ப்பு தெறிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஸ்டெர்லைட் சார்பில் தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க கூடாது என கோஷம் எழுப்பினர் . இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, தூத்துக்குடி.