போதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆங்கில புத்தாண்டு கேளிக்கை விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யும் ஹோட்டல்கள், விடுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மாநகர காவல் துறை ஆணையாளர் போக்குவரத்து விதி மீறல்களை தடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் உள்ளூர் காவல் துறையினர் இணைந்து நகரம் முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட உள்ளார்கள்.
மது அருந்தி விட்டு பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபவர்கள், குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், வாகனப் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்துகொண்டும் வாகனம் ஓட்டுபவர்கள், பொது மக்கள் நடமாட்டத்திற்கும், வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் விதமாக அதிவேகமாகவும் அஜக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காகவும் 45 முக்கியமான சாலை சந்திப்புகள் மற்றும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு காவல் குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை செய்யப்பட உள்ளன. அனைத்து மேம்பாலங்களிலும் 31 தேதி இரவு புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.