கோவை சுந்தராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், காவல் ஆய்வாளர் நடேசன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அபோது பொள்ளாச்சி சாலையில் ஒரு வாலிபர் போதை மாத்திரை விற்பதனை போலிசார் அறிந்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று பார்த்தபோது, ஹரி பிரசாத் (20) என்ற டிப்ளமோ படிக்கும் கல்லூரி மாணவன் போதைக்காக மாத்திரை விற்று வருவதனை பார்த்தனர். ஹரி பிரசாத்தை கைது செய்த போலிசார், கல்லூரி மாணவன் ஹரி பிரசாத் இடமிருந்து, NIPAM – 20 மாத்திரைகள், Tepentdal – 40 மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். டிப்ளமோ படிக்கும் மாணவன் போதைக்காக மாத்திரை விற்கும் பின்னணி குறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போதைக்காக மாத்திரை விற்ற டிப்ளமோ பட்டய படிப்பு மாணவனை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா, கஞ்சா சாக்லெட் ஒருபுறம் இருக்க , மறுபுறம் போதைக்காக மாத்திரைகளையும் போதை பிரியர்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில், அவர்களை பிடித்து போலிசார் அதிரடி காட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.