மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கன மழையால் மலைப்பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. 22 நாட்களுக்கு பின்னர் கடந்த 14-ந் தேதி மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் கடந்த 20-ந் தேதி குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடர்லி-ஹில்குரோவ் மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் கடந்த 20-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்களுக்கு மலை ரெயில் ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து ஊட்டி மலை ரெயில் காலை 7. 10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.