தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்கள் குறித்து உயர்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜக்கண்ணப்பன் அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களின் முன்னிலையில் வருவாய்த்துறை,நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத் துறை,மின்சாரத்துறை,தோட்டக்கலைத்துறை ஊராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மழையால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 25 ஊராட்சிகளில் கனமழையினால் ஏற்ப்பட்ட பாதிப்புகளையும் , பாதிப்புகளை சீரமைக்க தேவையான நிதி உதவிக்கு ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் கூட்டத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒட்டப்பிடாரம் யூனியன் துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் ஒன்றிய பெருந்தலைவர்கள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.