கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் சொக்கநாடு புதுக்காடு எஸ்டேட்டில் இறங்கிய காட்டுக்கொம்பன் படையப்பாவை கோபப்படுத்த முயன்ற ஜீப் ஓட்டுநர் மற்றும் இளைஞர்களை வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சில நாட்களாக காட்டுக்கொம்பன் படையப்பா அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது நிரந்தர இடம் இல்லாமல் கடந்த தினம் புதுகாடிற்க்கு வந்த.
படையப்பா அங்கு திருவிழாவிற்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாழை மரங்களை தின்னு கொண்டிருந்தது அதன் வழியாக வந்த ஜீப் பயணிகள் காட்டுக்கொம்பன் படையப்பாவை கோபப்படுத்த முயன்றனர். யானையை கோபப்படுத்த முயன்றவர்களுக்கும் அங்குள்ள பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டது தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தி அங்குள்ள பொதுமக்கள் ஜீப் ஓட்டுநரையும் பயணிகளையும் அனுப்பி வைத்தனர். இதன் மூலம் கிடைத்த வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோ மூலம் வனத்துறையினர் ஜிப்பையும் மற்றும் வாகன ஓட்டுனரையும் கஸ்டடியில் எடுத்துள்ளனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு