தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கி வரும் அருள்மிகு சுப்பிரமணியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நல பணி திட்டம் அணி என் 254இல் ஒருங்கிணைப்பில் ஒரு முறை பயன்படுத்தும் (பிளாஸ்டிக்) நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் கீழ் விளாத்திகுளம் கல்லூரியின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு,
மாபெரும் விழிப்புணர்வு பேரணியை இந்த பேரணியை விளாத்திகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்கள் கொடி அசைத்து தொடக்கி வைத்து முழுமையாக பேரணியை முன் நின்று நடத்தியும் வைத்தார் கல்லூரியின் முனைவர் சௌந்தர்ராஜன் அவர்கள் விழிப்புணர்வு பேரணி குறித்த நோக்க உரையை ஆற்றினார் மாணவர்களும் மாணவிகளும் வரவேற்பு வழங்கினார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சே. பார்த்தசாரதி அவர்கள் நெறிப்படுத்தினார் கல்லூரியின் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் இணைந்து சிறப்பாக வழி நடத்தினார்கள் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முது முனைவர் ஐயப்பன் மட்டும் உடன் கல்வித்துரை பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் மற்றும் முனைவர் சசிதரன் பேரணியை திட்டமிட்டு ஒருங்கிணைத்தனர் இறுதியாக தமிழ் துறை பேராசிரியர் முனைவர் ஐயப்பன் அவர்கள் நன்றி உரை வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.