கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள ஷேக்கல் முடி புதுக்காடு பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள உயர் மின்விளக்கு கோபுரம் வளைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. அது எப்பொழுது உடைந்து கீழே விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். அப்பகுதியானது பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் இருக்கும் சமயங்களிலோ அல்லது வாகனங்கள் செல்லும் பொழுதோ இந்த சாய்ந்த நிலையில் இருக்கும் உயர் மின்விளக்கு கோபுரத்தினால் ஏதாவது விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த உயர் மின்விளக்கு கோபுரமும் சரியான பராமரிப்பு இல்லாமல் சில நேரங்களில் மின்விளக்குகள் எரியும் சில நேரங்களில் எரியாது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மேலும் அப்பகுதியில் இன்னும் சில இடங்களில் தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டி உள்ளது அதையும் செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது பற்றி பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இது போன்ற பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர அமைக்கப்பட வில்லை என்றால் மனித வனவிலங்குகள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே முறிந்து விழும் நிலையில் உள்ள உயர் மின்விளக்கு கோபுரத்தை உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் தெருவிளக்குகள் தேவையான இடங்களில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.