
கோவை மாவட்டம் வால்பாறை செல்லும் வழியில் உள்ள ஆழியாறு அணை பகுதியானது சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. ஆழியார் அணைப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் விடுமுறை நாட்களில் இங்கு வாகன நெரிசல் மிகுந்து காணப்படும் இவ்வாறான சூழ்நிலையில் ஆழியார் அணை பகுதியில் உள்ள காவல் உதவி மையம் செயல்படாமல் உள்ளது மேலும் அங்கு காவல் துறையினர் யாரும் பணியில் இருப்பதாக தெரியவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி மேலே செல்லும் வாகனங்களும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு கீழே வரும் வாகனங்களும் ஆழியார் அணை பகுதியை கடந்துதான் சென்று வருகின்றன எனவே அப்பகுதியில் போக்குவரத்து மிகுந்து காணப்படும் ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுவதால் அப்பகுதி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் தடுமாறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது எனவே ஆழியார் அணை பகுதியில் உள்ள காவல் உதவி மையத்தில் காவல் துறையினரை பணியமர்த்தி ஆழியாறு அணை பகுதியில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் இன்னல்களை போக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.











