கோவை தொண்டாமுத்தூரை அடுத்த குப்பேபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் அப்பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியாறிய காட்டு யானை ஒன்று சக்திவேலுக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள சொட்டு நீர் செல்லக்கூடிய தண்ணீர் பைப்புகளை உடைத்துள்ளது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகிய நிலையில் தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்பொழுது மலைப் பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மலைப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள விளைநிலங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வரும் காட்டு யானைகள் விளைநிலங்களில் சேதப்படுத்தி சென்று விடுகின்றன மேலும் தண்ணீர் பைப்புகளையும் உடைத்து விட்டு செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.