Trending

சீரமைக்கப்படாத வடிகால் அமைப்பு மூணார் டாட்டா பொது மருத்துவமனை சாலையில் பயணிகள் தத்தளிப்பு??

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் பொதுவாகவே மழையின் அளவு அதிகம் மழைக்காலங்களில் அதாவது ஜூன் முதல் செப்டம்பர் மாத வரை மழையின் அளவு கூடுதலாக இருக்கும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நவம்பர் டிசம்பர் போன்ற மாதங்களிலும் மழை பெய்து வருவது வழக்கம். ஆனால் இந்த வருடம் தற்போது வரைக்கும் மழையின் தாக்கம் குறையவில்லை. மூணார் பஞ்சாயத்தின் சார்பில் சாலைகள் மேம்படுத்துதல் ,வடிகால் அமைப்புகளை சரிபடுதல் போன்ற சீரமைப்புகள் செய்யப்படும் ஆனால் பல மாதங்களாகவே டாட்டா பொது மருத்துவமனை செல்லும் சாலையில் வடிகால் அமைப்பு சீரமைக்கப்படாத நிலையில் அனைத்து மழை தண்ணீரும் சாலை வழியே ஓடுவதால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டும் அல்லாது அவசர காலகட்டத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் எனவே உடனடியாக மூணார் பஞ்சாயத்து மழை நீர் ஆற்றின் வழியாக செல்ல சீரமைக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன்
மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp