கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள நிர்மலா மாதா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நேற்று முப்பத்தி ஒன்றாவது ஆண்டு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் சுமார் 3000க்கும் அதிகமான பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்ப விருந்தினராக ராமநாதபுரம் டயசிஸ் பிஷப் மேதகு மார் பால் ஆலபாட், குனியமுத்தூர் செயின்ட் மார்க் ரோமன் கத்தோலிக்க சபை போதகர் ஜெய்சன் அவர்களும் மற்றும் விமல் ராணி நிர்வாகத்தின் தலைவர் ரோஸ்லின் முத்தேடன் பாலக்காடு, ஓய்வு பெற்ற அரசு நீதிபதி திரு முகமது ஜியாபுதீன் கோயம்புத்தூர், அனைத்து நிர்மலா மதா பள்ளிகளின் தலைமை ஆசிரியைகள் மற்றும் அனைத்து பிரிவை சார்ந்த அருட் சகோதரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை Rev. Roselin pullely அவர்களின் தலைமையில் செயலாளர் திருமதி கீதாஞ்சலி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், ராமநாதபுரம் மறை மாவட்டத்தலைவர் மேதகு மார் பால் ஆலபாட் அவர்கள் துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் ஓய்வுபெற்ற நீதிபதி உயர் திரு முஹம்மது ஜியாபுதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இப்பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பொருளியல் துறையைச் சார்ந்த திருமதி புஷ்பா ஆண்டனி அவர்களுக்கு பணி நிறைவு விழா நடத்தப்பட்டு சிறப்பு பணி செய்ததற்கான நினைவு பரிசும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.
மட்டுமல்லாது மாணவர்கள் கண்கவரும் வ நாடகம்,கவிதை மற்றும் எழு கண்டங்கள் மற்றும் அனைத்து மக்களும் ஒன்று என்பது உணர்த்தும் வண்ணமாக ஏழு கண்டங்களின் நடனங்கள் அரங்கேற்றப்பட்டன.
பின்னர் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் மற்றும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பள்ளியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசுகள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டு கவுர்விக்கபட்டனர்.மிகவும் சிறப்பாக விழாவை ஒருங்கிணைத்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு நாளைய வரலாறு சார்பாக வழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.