கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு பகுதியிலுல்ல மிக சுற்றுலாத்தலமான எக்கோ பாயிண்டில் (பாலாறு) காலை 8 மணி முதல் படையப்பா என்ற காட்டு யானை இறங்கியது. படையப்பா யானை காலையிலேயே இரண்டு கடைகளை உடைத்தது, அந்தக் கடையில் இருந்த பைனாப்பிள், சோளம், இளநீர், போன்ற உணவுப் பொருட்களை தின்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தது, அப்பொழுது அங்குள்ள வனத்துறையினர் காட்டுக்கொம்பன் படையப்பாவை காட்டிற்குள் விரட்டினர்.
இதே போல மாலை நேரத்திலும் கடைகளை உடைத்தும் அங்கிருந்த உணவுப் பொருட்களையும் தின்றது. அந்த சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களையும் தடுத்து நிறுத்தியது, அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் காட்டுக்கொம்பன் படையப்பாவை மிக அருகில் கண்டு ரசித்தனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.