கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மிக சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் தேயிலை தோட்டம்தான் மிக சிறப்பு அந்த தேயிலை தோட்டத்தில் ஏராளமான மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேயிலை நிறுவன தொழிலாளர்கள் வசிக்கும் வீட்டில் தான் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தீ விபத்தை பார்த்து குடும்பத்தினர் இடம் பெயர்ந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எட்டு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
நேற்று மாலை 7 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. கடலார் எஸ்டேட் கேன்டீன் அருகே உள்ள வீடுகளில் தான் தீ விபத்து நடந்தது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், ஆனால் தீ வேகமாக பரவி வீடுகளை எரித்தது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர், ஆனால் தீ வேகமாக பரவியது. விபத்துக்கான காரணம் மின் இணைப்பு சரியான முறையில் இல்லை என்பதுதான். தீப்பிடித்து எறியப்பட்ட வீடுகளில் வசித்து வந்த மக்களை பிற பகுதிகளுக்கு தேயிலைத் தோட்ட நிர்வாகம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.