வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் உயர் மின்விளக்கு கோபுரம் மற்றும் தெருவிளக்குகள் எரியாமல் பொதுமக்கள் அவதி!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதி அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் மற்றும் உயர் மின்விளக்கு கோபுரங்கள் செயல்படாமல் அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது மேலும் அந்தப் பகுதிகளில் சில இடங்களில் புதர்கள் அதிகமாக மண்டி கிடப்பதால் அதற்குள் சிறுத்தை கரடி போன்ற வனவிலங்குகள் பதுங்கி இருந்தாலும் வெளியே தெரிவதில்லை.
அப்பகுதியில் இரவு சுமார் எட்டு மணி அளவிலேயே சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு கோழி நாய் போன்ற வீட்டு பிராணிகளை பிடிக்க வனவிலங்குகள் பகல் நேரங்களில் கூட வனத்தை விட்டு குடியிருப்பு பகுதியின் அருகில் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இப்படி உள்ள சூழ்நிலையில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டால் வன விலங்குகள் நடமாடத்தை அறிந்து கொள்ள முடியாமல் விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர் எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து உயர் மின்விளக்கு கோபுரங்கள் மற்றும் தெருவிளக்குகள் முறையான பராமரிப்போடு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் இரவு நேரங்களில் அனைத்து மின்விளக்குகளும் எரியும் வகையில் சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு
செய்திகளுக்காக                                                                                                                                                                      கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp