
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு தாமரைக்குளம் ஊராட்சி பகுதியில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்குவாரியில் விபத்து ஏற்பட்டு அங்கு பணியிலிருந்த அயனி என்ற பெண் உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் S.ஜெஸீம் அவர்களுடன் ஈத்தங்காடு ஜங்ஷன் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்,கழக அமைப்புச் செயலாளர்,கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் திரு.என். தளவாய்சுந்தரம் B.Sc.B.L., அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சம்பவம் குறித்து மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் கேட்டறிந்து ஆறுதல் கூறியதுடன் காவல் துறையினரிடம் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டினை கல்குவாரி நிர்வாகத்தினர் வழங்கிட வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

பேச்சவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவே அப்பகுதியில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கன்னியாகுமாரி
இந்திரனுடன்
M.சுரேஷ்குமார்.











