
கோவை மாவட்டம் வால்பாறை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வால்பாறை நகர தலைமை சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒரு வருடத்திற்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சி வால்பாறை நகர தலைவர் ஆண்ட்ரூஸ் செயலாளர் செய்யது அலி தலைமையில் வால்பாறை பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளின்

ஏற்பாட்டில் குழந்தைகளுக்கும் பள்ளி மாணவ மாணவியருக்கும் விலையில்லா ரொட்டி,பால், முட்டை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்

அதே சமயம் இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.











