தூத்துக்குடி புதியதுறைமுகத்தில் அகித்துக்ல இந்திய வேலை நிறுத்தம் காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள 30 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், துறைமுகம், ரயில், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் காரணாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் எதிரொலியாக வ.உ.சி., துறைமுக ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் சுமார் சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்கள் தூத்துக்குடி துறைமுகம் முன்பு மத்திய அரசு மற்றும் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் துறைமுக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக துறைமுக ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாததால் சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி மற்றும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அகில இந்திய நீர்வழிப் போக்குவரத்து சம்மேளன செயலாளர் ரசல் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஸ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.