தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் 17, 18 தேதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் பெரும்வெள்ளம் சேதத்தால் ஏற்படும் மழை நீர் தேங்குவதைத் தவிர்க்க தூத்துக்குடி வெள்ளநீர் புறவழிக் கால்வாய் அமைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி தெற்கு பாஜக வெள்ளத்தாய் தலையில் மனு அளித்தானர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிப்பு ஏற்படும், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியும் , மக்களின் உடமைகள் சேதமாகியும் பொதுமக்களும் கால்நடைகளும் தொடர்ந்து உயிரிழப்பை சந்தித்து வருகிறது கடந்த ஆண்டு 1000 மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததாக தகவல் மிகந்த வேதனையளிக்கிறது.
இதற்கு நிரந்தர தீர்வு: நான் பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் மாநகரில் வசித்து வருகிறேன் தூத்துக்குடி மாநகரம் வங்காள வரிகுடா கடலை ஒட்டி அமைந்துதிருப்பதால் சுற்று வட்டாரங்களில் பல கிலோமீட்டர் அப்பால் பெய்யும் மழை மற்றும் வெள்ள நீர் தூத்துக்குடி நகருக்குள் வந்துவிடுகிறது.
இதைத் தடுப்பதற்கு மாற்று தீர்வாக எவ்வாறு போக்குவரத்தில் புறவழிச் சாலை அமைத்து தேவையற்ற வாகனங்களை ஊருக்கு வராமல் புறவழிச் சாலையில் செல்வது போல் தூத்துக்குடி மாநகரைச் சுற்றி வெளிவட்ட வெள்ளத் தடுப்பு வாய்க்கால் சுமார் 30 மீட்டர் அகலத்தில் கடல் மட்டத்திற்குப் சற்று உயர்வாக தூத்துக்குடி ஊரை சுற்றி அமைத்தும் அதன் வழியாக மேற்கு பகுதியிலிருந்து வரும் மழை வெள்ளநீரும் வடக்கு பகுதியில் இருந்து வெள்ள நீரும் தூத்துக்குடி மாநகருக்குள் வராமல் செல்வது ஏதுவாக பைபாஸ்(வெளிவட்ட) மழைநீர் கால்வாய் அமைக்க தூத்துக்குடி பாஜக கட்சி சார்பாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.