பஞ்சாப், அரியானா எல்லையில், விவசாயிகள் போராட்டத்தின் மீது, நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 24 வயது இளம் உயிரிழந்து உள்ளார்; 15 விவசாயிகள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இவரையும் சேர்த்து இதுவரை 4 விவசாயிகள் உயிர் இழந்து உள்ளனர். ஒன்றிய பாஜக மோடி
அரசின் இந்த கொலைவெறி ஆட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்று SKM அறைகூவல் விடுத்துள்ளது. அதன்படி இன்று 23.02.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் மாவட்ட எஸ் கே எம் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தூத்துக்குடி சிதம்பர நகரில் SKM மற்றும் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில் ஐஎன்டியூசி மாநில தலைவர் பி.கதிர்வேல் , சிஐடியூ மாநில செயலாளர் ஆர்.ரசல் மாவட்ட தலைவர் பேச்சிமுத்து ஏஐசிசிடியூ முருகன், சிவராமன் தொமுச கருப்பசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் லெனின் குமார், மாவட்ட தலைவர் ராகவன், மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில்
உள்ளிட்ட. விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் கறுப்புக் கொடிகளுடன் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
–முனியசாமி.